Tuesday, July 7, 2009

உணர்வு...12பி...!


உணர்வு...12பி
விரைவில்...
வரும்
உங்கள்...மன உணர்வுபிளாக்ஸ்பாட்.காம் ........ல்
எப்படி இருக்கவேண்டிய நான் ...
இப்படி இருக்கேன்
வரும் வரும் ஏதிர் பாருங்கள்......

Monday, July 6, 2009

ராஜாவும்.......?ஏழு...முப்பதும்

ராஜாவும்.......?ஏழு...முப்பதும்

ஒரு ஊரில் ஒரு ராஜா...


நாட்டிற்கு பல நன்மைகள் ... மக்கள் அனைவரும் சந்தோஸமாக வாழ்ந்தார்கள்...!


நல்ல பெயர்,புகழுடன் வாழ்ந்துவந்தார்...


அவர் முன்னிலையில் saturday பகவான் வந்து உன் நல்ல செய்கையும்,

புகழும் எனக்கு பெருமை தருகிறது ஆனாலும் ஏழுஅரை ஆண்டுகாலம் இருக்க எனக்கு மனசு இல்லை அதனால் ஏழுஅரை நாட்கள் மட்டும் இருக்கிறேன் என்று ராஜாவிடம் saturday பகவான் கூறினார்

ஆனால் ராஜா எனது பெருமையை நான் சொல்லித்தெரியவேண்டாம் மக்கள் சொல்லிதெரியவேணாம் நீயே சொல்கிறாய் அதனால் நீ என்னிடம் ஏப்படி வருகிறாய் என பார்கிறேன் என்று ராஜா சொல்லிவிட்டார் saturday பகவான் சென்றுவிட்டார்

ராஜா தனது அமைச்சரைகூப்பிட்டு கடலுக்கு அடியில் ஒருஅரண்மனை அமைத்து அதில் சிலநாட்கள் தங்கி இருந்தார்


சிறிது நாட்கள் சென்றன................அன்று........
saturday பகவான் ராஜா முன் வந்தார்...

ராஜா...saturday பகவானைப் பார்த்து சிரித்தார் அதற்கு saturday பகவான் .. ஏன்ன ராஜா சிரிக்கிறாய் என கேட்டதற்கு....

ராஜா...

நீ என்னிடம் வராமல் எப்படி இருந்தேன் பார்த்தியா? என் புத்திசாலிதனத்தை


saturday பகவான் ... ராஜா நீ மட்டும் இல்லை யாரா இருந்தாலும் நான் வர வேண்டுமானால் வந்தே தீருவேன் நான் வந்ததனால் மட்டுமே நீ கடலுக்கு அடியில் சென்றாய்... காலம் இன்னும் உன் புகழ் சொல்லும் நலமுடன்னு சொன்னார்


இதன் நீதி.... நாம எவ்வளவுநன்மை செய்தாலும்
துன்பம் என சிறு சோதனை உரசி பார்க்கும் அதனை பெரிதாக கருதவேணாம்

அடிப்பட்டவன் அடுத்த அடி பார்த்து கவனமுடன் வைப்பான்.........
நீங்க என்ன சொல்றீங்க?

உணர்வுடன்....உயிர்

Saturday, July 4, 2009

இத மட்டும் வாசிக்காதீங்கஞாபகங்கள்..

ஞாபகங்களை எதிர்பார்த்தேன்...


கதிர் இப்படிதான் இருந்திருப்பார் போல...அதனாலதான் பா.விஜய் இப்படி நடிச்சிருக்கார்.. ( காரணம் சொல்லி தப்பிக்க விஜய்க்கு உதவுமில்ல..)


மீரா சேட்டு பொண்ணு ஆனா நல்லா தமிழ் பேசுது... சேட்டு அப்பா கூட நல்லா தமிழ் பேசுறார்.. தில்லிக்கு போனா அங்க உள்ள வடநாட்டுகாரங்க கூட தமிழ் பேசுறாங்க...இது தமிழ் படம்லே..!


ஜேம்ஸ்விக்... பழையபாடல் ரொம்ப பிடிக்கும் போல...

மீயூசீக் கத்துகோங்க... விஜயை ஏமாத்திட்டிங்க...

அவரும் ஏமாத்திருக்க்கக் கூடாது...


இயக்குனர் ஜீவன் பேருல...மட்டும் இருக்குபோல... படத்துல இல்லை

இந்த கதைய இன்னும் சிறப்பாக விருவிருப்பாக பண்ணிருக்கலாம்

பணம் போடுறவரு நான் இப்படி டான்ஸ் ஆடுவேன்னு சொன்னா நீங்கதான் மாட்டேன் மாட்டேன்னு சொல்லிருக்கணும் - குறிப்பா.... உன்னால் முடியும் பாடல்வ் வரி நல்லா இருந்தும் ஜீவனில்லை ஜீவன்.


முதல் பாடல் தேவையா... யோசிக்கலாம் காலம் இன்னும் இருக்கு...

எல்லோரும் ஆட்டோகிராப் போல இருக்கும் நினைச்சாங்க... தியேட்டரில் ஒரு ஆட்டோ கூட இல்லை ஜீவன்... பா.(வம்)விஜய்

தாய்காவியம் படைப்பார்னு பார்தேன்...


ஒலி..ஓளி அமைப்புகூட... வேணாம் அடுத்த படைப்பில் மார்க் ..தோல்வி தான் சரித்திரத்தைச்

செதுக்கிறது

தங்கத்தை இரும்பு

செத்துக்குவதைப் போல்.


நிராகரிக்கப்படுகிறாயா?

நில் நிமிர்ந்து.

உனனை வருத்தும் கைகளே

ஒரு நாள் வருந்தும்.


மேலே எறிந்த பந்து

பூமிக்கு வந்தே ஆக வேண்டும்

செய்யப்பட்ட முயற்சி

பலனை அடந்தே தீரும்.


வெற்றிகளின் தாமதத்தால்

வருந்தாதே.

தயிர்

மறுநாளே கிடைக்கிறது.

கரும்பு

ஆறு மாதத்திற்குப் பிறகுதான்

கிடைக்கிறது!


பா.விஜய்Wednesday, July 1, 2009

ஞாபகங்கள்...நட்பும் நானும்..நட்பும்...நானும்...

ஆட்டோகிராப் படம் வருவதற்குமுன்....

பாடல் என்னை கவர்ந்தன...

.குறிப்பாக...ஒவ்வொருப்பூக்களுமே பாடல்

தன்னம்பிக்கை தரும் பாடல்

பா.விஜயை .ரொம்பபிடிக்கும் போன் மூலம்
தொடர்பு கொண்டு பேசினோம்...

அவரும் பேசினார்

எப்படிபோன நட்பு...

வித்தக கவிஞர் விருது வழங்கும் விழாவிற்கு போனேன்
அங்குதான் நானும் அவரும் பார்தோம்....
பலமுறை போனில் நலம் , பாடல் பற்றி பேசினோம்

நம்பிக்கையுடன்... என்ற புத்தகத்தில்
நிறைய பிடிக்கும் சில வரிகள்
மகிழ்ச்சியானவனைப் போல்
நடித்து நடித்தே...
உண்மையில் ஒருநாள்... நீ...
மகிழ்ச்சியோடு இருக்க
ஆரம்பிப்பாய்...!

இது போன்ற அருமையான கவிதைகள் நிறைய...
எப்போது அவருடைய படம் ( gnapagangal) ஞாபகங்கள்
வெற்றி பெற உங்கள் அன்பான வாழ்த்துகளுடன்... நானும்
உணர்வு...


Monday, June 29, 2009

நான்...நாமானபோது
நான்...நாமானபோது

இருந்தேன்...


இருப்பேன்...


இறப்பேன்...என வாழ்ந்த நான்வாழ்ந்தேன்...


போராடினேன்...


போராடிக்கொண்டுஇருக்கிறேன்...என வாழ்கிறேன்வாழ்க்கை...இல் அனுபவம் சிலவரலாம்
அனுபவபட்டு...பட்டே...வாழக்கூடாது...!நான்... வாழனும்....


சந்தோஸமாக...


நிம்மதியாக...


அமைதியாக...


உழைப்பாளியாக...


அறிவாளியாக... ம்....ம்....ம்....!


மொத்ததில்


உன்னைப்போல... மனிதனாக


இது கனவல்ல....


நான்... வாழப்போகும்... வாழ்க்கை

வாரேன்....உணர்வு

Friday, June 26, 2009

சில...உறவுகள்.....? பல...உணர்வுகள்.....!

24-05-09...

கோர்ட்டில்...

நெல்லை நீதிமன்ற்த்தில்...பார்த்த..
உறவுகள் சில..


தாய்..கைதியாய் வந்தாள்...

கண்களில் ஏதோ ஒரு ஏக்கம்...

கூனிகுறுகி நின்று சென்றது

கஷ்டமாய் இருந்த்து...


பெண்போலீஸ்....அந்தத் தாயைக் கூட்டி வந்தள்ள

அந்தப் பெண் போலீஸ் கண்களில் ...

பிக்னிக் ஸ்பாட் வந்தது போல..
விளையாட்டு தனம்
வேர்கடல,முருக்கு சாப்பிட்டு பாவம் அந்த அம்மா
இன்பம் துன்பம் 6கைகளில் 2பெண் போலிஸ் 1அம்மா
( அந்த அம்மா தவறு செய்திருக்கலாம்..... ஆனால் அந்த தவறு...
உணர்வுடன்...இருந்திருக்கலாம்)
அம்மா மகனிடம்.....
உறவோட அடிப்படை பாசம்னு தெரிஞ்சா... என்ணை சாப்பிட்டியானு கேட்டுருப்ப.....!
பெட்டி கேஸ் முதல்...... கஞ்ஜா,கடத்தல்,கொலை,விபச்சாரம்,சொத்துதகராறு,,
அப்ப்பப்பா என்னடா இது வாழ்க்கை
மீண்டும் வருவேன்....உங்கள் உனர்வை உசுப்பேற்ற...

Tuesday, June 23, 2009

தனிமையின்...தருணம்...


தனிமையின் உணர்வு...


தனிமை எப்போது தேவைப்படும்?

மனசந்தோஷத்தில் (காதல்)

மன அழுத்தத்தில் (துக்கம் )

மன அமைதிக்காக ( தியானம்)
தனிமையாய்.... இருப்பதும் ரொம்பகஷ்டம்...தவறும் கூட
கடந்த...சில தினத்தில்

சின்ன வயசு ஒரு பையன் விட்டில் சில பிரச்சனை காரணமாக கடையில் இருந்து வந்துள்ளான் ( தனியாக)சிலப் பணப் பிரச்னையா,மனப் பிரச்னையா , குடும்பப் பிரச்னையா காதல் பிரச்னையா, கடன் பிரச்னையா ...எது காரணம்னு தெரியல..ஏன்னா நாம கடவுள் இல்லைலா?

இல்லாட்டி மனுஷனைப் புரிஞ்சிக்கிற அளவுக்கு சில நேரத்துல நாம மனுஷனா இருக்கிறதில்ல...

திங்கட்கிழமை 22
அதிகாலை..
மூணு மணிக்கு...
பத்து ரூபா கயிறு அவனோட உயிரின் விலை..
தனிமையா இருங்க..தப்பில்ல..
வாழ்றதுக்கு யோசிங்க...
அத்தன ப்ரச்னைகளையும் தாண்டி
வந்தவன் தான் நான்...

திரும்பி பார்த்தா பெருமையாயிருக்கு...
என்ன நினைச்சி..( அந்தப் பையனோட என்னை ஒப்பிட்டுப் பாக்குறப்ப)

வாழணும்...தப்பா முடிவெடுக்கிற முன்னால யோசிக்கணும்.

எதுக்காண்டி நாம உயிரைத் தொலைக்கணும்? காசுப் பெறாத சிலப் ப்ரச்னைக்காகவா? நம்ம அம்மா அப்பா நம்மள எப்படி பாத்துருப்பாங்க? நாம குழந்தைகளை எப்படி பாக்கணும்னு ஆசைப்பட்டிருப்போம்...எத்தன நாள் ராத்திரி பகலா வேலை ..கத்துருப்போம்.. யோசிசுருக்கலாம்லா?

வாழணும்னு ஆசைப்படு..வலியே தெரியாது..(ஆனந்த தாண்டவத்தில் சுஜாதா வசனம்)

மீண்டும் என் வாணியிடம் மீண்டு வந்து எழுதுகிறேன்...

Monday, June 22, 2009

நானும்...என் நிழலும்


நானும்...என் நிழலும்

அப்பா......

அப்ப்பபா.......

பணம் இருந்தால்....உன்னை உனக்கு தெரியாது!

பணம் இல்லை....என்றால்உன்னை யர்ருக்கும் தெரியாது...(இந்தப் பழமொழி எல்லாருக்கும் தெரியும்ங்கிறது எனக்குத் தெரியும்..ஆனா அனுபவிச்சவங்க ரொம்ப குறைய..)

இது ஆரம்பம் தான்..முடிவல்ல..

இன்னும் கூச்சறிக்கும் உணர்வுகள்..

வரும் வரும்..

பூ மனம்..

வணக்கம்....

சொன்னா
வ்ந்துடான்யா...வந்துடான்யா...

சொல்றது கேட்குது சரி சரி உணர்வுகளுடன் ...

கடல்ல...கப்பல்தான் அழகு
அத..விட நம் குழந்தைகள் விட்ற காகித கப்பல் அழகுனு பெத்தவங்கலுக்குத் தான் தெரியும்.

நாமல்லாம் ஊட்டிக்கு போயிருப்போம்..(என் நிழல் ( வாணி )போனதில்ல..அது வேற விஷயம்..)

பூந்தோட்டத்துக்கும் போயிருபோம்... பாத்து பாத்து ரசிப்போம்
அதே நம்ம விட்ல ஒரு தொட்டில ஒரு மல்லிபூ பூக்கும் போது உண்ர்வோடு கலந்த சந்தோசம் வரும் பாருன்க அப்ப்பப்பப்பா.......


மனசு இருக்குல்லா அதுவே ஒரு பெரிய கடல் எவ்வளவு சந்தோசமும் தான்கும்
ஆனா சில... இழப்புகளை தான்காது1.அப்பா 2.எனது ஜனனியை