Tuesday, June 23, 2009

தனிமையின்...தருணம்...


தனிமையின் உணர்வு...


தனிமை எப்போது தேவைப்படும்?

மனசந்தோஷத்தில் (காதல்)

மன அழுத்தத்தில் (துக்கம் )

மன அமைதிக்காக ( தியானம்)
தனிமையாய்.... இருப்பதும் ரொம்பகஷ்டம்...தவறும் கூட
கடந்த...சில தினத்தில்

சின்ன வயசு ஒரு பையன் விட்டில் சில பிரச்சனை காரணமாக கடையில் இருந்து வந்துள்ளான் ( தனியாக)சிலப் பணப் பிரச்னையா,மனப் பிரச்னையா , குடும்பப் பிரச்னையா காதல் பிரச்னையா, கடன் பிரச்னையா ...எது காரணம்னு தெரியல..ஏன்னா நாம கடவுள் இல்லைலா?

இல்லாட்டி மனுஷனைப் புரிஞ்சிக்கிற அளவுக்கு சில நேரத்துல நாம மனுஷனா இருக்கிறதில்ல...

திங்கட்கிழமை 22
அதிகாலை..
மூணு மணிக்கு...
பத்து ரூபா கயிறு அவனோட உயிரின் விலை..
தனிமையா இருங்க..தப்பில்ல..
வாழ்றதுக்கு யோசிங்க...
அத்தன ப்ரச்னைகளையும் தாண்டி
வந்தவன் தான் நான்...

திரும்பி பார்த்தா பெருமையாயிருக்கு...
என்ன நினைச்சி..( அந்தப் பையனோட என்னை ஒப்பிட்டுப் பாக்குறப்ப)

வாழணும்...தப்பா முடிவெடுக்கிற முன்னால யோசிக்கணும்.

எதுக்காண்டி நாம உயிரைத் தொலைக்கணும்? காசுப் பெறாத சிலப் ப்ரச்னைக்காகவா? நம்ம அம்மா அப்பா நம்மள எப்படி பாத்துருப்பாங்க? நாம குழந்தைகளை எப்படி பாக்கணும்னு ஆசைப்பட்டிருப்போம்...எத்தன நாள் ராத்திரி பகலா வேலை ..கத்துருப்போம்.. யோசிசுருக்கலாம்லா?

வாழணும்னு ஆசைப்படு..வலியே தெரியாது..(ஆனந்த தாண்டவத்தில் சுஜாதா வசனம்)

மீண்டும் என் வாணியிடம் மீண்டு வந்து எழுதுகிறேன்...

3 comments:

தமயந்தி said...

மூணுப் புள்ளிகள் மத்தில ஒரு வாழ்க்கை தென்படுது...

அந்த விததை தொடரட்டும்...

வாழ்த்துக்கள்

Nathanjagk said...

வித்யாசமா இருக்கே! இனி ​ரெகுலரா படிச்சிட ​வேண்டியதுதான்! ஆமா தம்பி ஜான் ஆப்ரஹாம் ​போட்டாவ ​போட்டிருக்கீங்களே, எதும் காரணமாவா?

ok da said...

ஓ...இதான் ஜான் ஆபிரஹாமா? சத்தியமா எனக்குத் தெரியாது...
சரி...ரீ...ரீஇ...இது கதையின் நாயகன் கதாநாயகன் அல்ல...இப்படியும் நாங்க தப்பிச்சிருவோம்...ஜான் ஆபிரஹாமை அறிமுகப்படுத்திய ஜெகநாத்னுக்கும்...
இனி ​ரெகுலரா படிச்சிட ​வேண்டியதுதான்!!!!..இதுக்கும் நாங்க நன்றி சொல்லிருவோமில்ல..

Post a Comment